அப்போ இந்த காதலும் விபூதியா – திருமணம் குறித்து கேட்ட ரசிகருக்கு லைவில் ஸ்ருதி சொன்ன ஷாக்கிங் பதில்.

0
9721
sruthi
- Advertisement -

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

-விளம்பரம்-

7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : 80ஸ்ல பாத்த மாதிரி இருக்கீங்க – குஷ்பூவின் லேட்டஸ்ட் ஸ்லிம் லுக்கை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

நடிகை சுருதி ஹாசன், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வந்தனர்.ருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன். இப்படி ஒரு நிலையில் இவருடனான காதலை முறித்துகொண்டார் சுருதி.காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள சுருதி, கடந்த சில மாதங்களாக சான்டனு ஹசாரிக்கா என்பருடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.Doodle Art எனப்படும் ஓவிய கலையில் கைதேர்ந்த இவர் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் வரைந்த வீடியோ படு வைரலானது. இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

-விளம்பரம்-

அப்போது ஒருவர், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டார். அதற்கு ஸ்ருதி, நான் நேர்மையாக கூறுகிறேன், நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நினைக்கிறேன். இதிலிருந்து நாம் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இது 2021 உலகில் பல அழுத்தமான சிக்கல்களும், கொழுந்துவிட்டு எரியும் கேள்விகளும் உள்ளன என்று கூறியுள்ளார்.

Advertisement