ராகவேந்திரா மண்டபத்திற்கு வரி செலுத்தும் விவாகரத்தில் நீதி மன்றத்தில் மனு கொடுத்தது தவறு என்று உணர்ந்துள்ளார் ரஜினி. ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்திருந்த ரஜினி, நீதி மன்றம் எச்சரித்தால் வழக்கை வாபஸ் வாங்கி இருந்தார. நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவையும் தாண்டி சொந்தமாக கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

இப்படி ஒரு நிலையில் இந்த மண்டபத்திற்கு கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரியாக ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ரஜினிக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த வரியை வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அப்படி தவறினால் 2% வட்டி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

ஆனால் மாநகராட்சி அளித்த இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பி.டி ஆஷா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி தரப்பில் வாதாடுகையில் கொரோனா தோற்று பரவலால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை திருமண மண்டபம் செயல்படவில்லை என்றும், இந்த மாதங்களில் நடப்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகையை பதிவு செய்து இருந்த நபர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் விவாதிக்கப்பட்டது.

30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், இதனை ஏற்க்க மறுத்த நீதிபதி, மாநகராட்சியின் நோட்டீசுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி பதிலளித்துவிட்டு உடனடியாக நீதிமன்றத்தை அவசரகதியில் அனுகியது ஏன்? என்றும் இது போன்று மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இப்படி ஒரு நிலையில் ட்வீட் ஒன்றை செய்துள்ள ரஜினி, “ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் இன்று கல்யாண மண்டபத்திற்கான சொத்து வரி ரூ. 6.56 லட்சத்தை சென்னை மாநகராட்சியில் செலுத்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் வரி செலுத்தியதற்கான ரசிது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் தாமத கட்டணத்திற்கு அபராதம் 9386 ரூபாய் என்றும், சொத்து வரி ரூ. 646610 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement