ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனின் கெட்டப் இதுவா..! சிம்ரன் வெளியிட்ட புகைப்படம்..!

0
324
Simran

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன் ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு அமையாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகை சிம்ரன் முதன் முறையாக ரஜினியுடன் “பேட்ட “படத்தில் நடித்து வருகிறார்.

rajini-petta

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற பல்வேறு நடிகர் பட்டாளம் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதாவது முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறாரா என்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

தற்போது “பேட்ட” படத்தின் படப்பிடிப்புகள் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடிப்பட்டது வருகிறது. மேலும், இந்த படத்தில் ரஜினியின் கெட்டப் என்ன என்பது சமீபத்தில் வந்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால், மற்ற நடிகர்களுக்கு என்ன கதாபாத்திரம் என்ன என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “பேட்ட” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் ஒருவேளை “பேட்ட” படத்தில் நடிகை சிம்ரனுக்கு இது தான் கெட்டப்பா என்று முணுமுணுத்து வருகின்றனர். ஆனால், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நடிகை சிம்ரன் வழக்கம் போல பதிவிடும் ஒரு சாதாரண புகைப்படத்தை போன்று தான் உள்ளது. இருப்பினும் எதற்காக இந்த புகைப்படத்தில் “பேட்ட” என்று பதிவிட்டுள்ளார் என்று ட்விட்டர் வாசிகள் குழம்பி வருகின்றனர்.