பேட்டியை பார்த்துவிட்டு, கிங்காங்கின் 10 வருட ஆசையை நிறைவேற்றிய ரஜினி. என்ன தெரியுமா ? வெளியான போன்கால் ஆடியோ.

0
1020
kingkong
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து அசத்தியவர் காமெடி நடிகர் கிங் காங். இவருடைய உண்மையான பெயர் சங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அதிசய பிறவி படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் கிங் காங். சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் ஆடிய பிரேக் டான்ஸ் இன்று பார்த்தால் கூட நகைச்சுவை வரும். அந்த படத்திற்கு பின்னர் தான் இவருக்கு பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். இவர் 5 மொழிகளில் 300கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சினிமாவில் பல்வேறு விருதுகளை வாங்கிய இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாது கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் படத்தையும் அளித்து. நடிகர் கிங் காங், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிங் காங், தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால் தற்பொழுது வரை வாழ்த்து பெற முடியவில்லை என்ற வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த செய்தி ரஜினியிடம் சென்றடைந்துள்ளது. பின்னர் கிங் காங்கிற்கு ரஜினி போன் செய்து பேசியுள்ளார். இதுகுறித்து கிங் காங் தெரித்துள்ளதாவது ‘ தேசிய விருது வாங்கியவுடன் தலைவர் ரஜினி சாரிடம் காட்டி, அவரோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. அவரைக் காண்பதற்காக பல்வேறு முயற்சிகள் செய்தேன். ஆனால், அந்த விஷயம் அவரிடம் போய்ச் சேரவில்லை. நிறைய முறை முயற்சி செய்தும் தலைவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அந்த விஷயத்தைச் சொன்னேன். அது எப்படியோ இணையத்தில் வைரலாகி, அந்த வீடியோவைத் தலைவர் ரஜினி சார் பார்த்திருக்கிறார். இன்று காலை ரஜினி சார் வீட்டிலிருந்து போன் வந்தது. ‘சார் பேசுகிறார்’ என்று கொடுத்தார்கள். ‘உங்க வீடியோவைப் பார்த்தேன். 10 வருடமாக என்னைப் பார்க்க முடியவில்லை, போட்டோ எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். நீங்கள் முயற்சி செய்யும்போது எனக்குச் சரியாக வந்து சேரவில்லை. இப்போது கரோனா அச்சுறுத்தலாக இருக்கிறது. அனைத்தும் சரியானவுடன் சொல்கிறேன். ஒரு நாள் சொல்கிறேன். குடும்பத்துடன் வாருங்கள்’ என்று ரஜினி சார் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement