முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்று மேடையிலேயே ரஜினி சுட்டிக்காட்டி இருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சுரதா அவர்கள் தன்னுடைய திரையுலக பயணத்தையும், நடிகர்கள் குறித்தும் பிரபல சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக் கூடிய நல்ல மனது கொண்டவர். அதை நான் நிறைய தருணங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஒரு முறை ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்தை உருவாக்கி இருந்தார். அந்த நகரத்தின் திறப்பு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்கள். மேலும், அந்த காலகட்டத்தில் திரைத் துறையில் கொடிகட்டி பறந்தவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெறும். அதோடு அவர்களை விழா மேடையிலும் அமர வைப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி கணேசனை ஒதுக்கி இருந்தார்கள். இதே சிவாஜி கணேசன் இடத்தில் வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால் விழாவிற்கு வந்து இருந்திருக்க மாட்டார். ஆனால், சிவாஜி கணேசன் பெருந்தன்மையோடு வந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார்.

Advertisement

இதுகுறித்து ரசிகர்களும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி. அவருக்கு எப்படிப்பட்ட மரியாதை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா கலை துறையில் இருந்தும் அவருக்கு அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. பின் சில ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கி இருந்தார்கள். அப்போதும் ஜெயலலிதா தான் முதலமைச்சர். அந்த விழாவை அவர் தான் தலைமையேற்று நடத்தி இருந்தார். மேலும், இந்தியாவில் எந்த ஒரு நடிகருக்கும் இதற்கு முன் இந்த மாதிரி ஒரு விழா நடந்தது கிடையாது.

இந்தியாவின் அனைத்து மொழிகளை சேர்ந்த திரை நட்சத்திரங்களும் அந்த விழாவில் வருகை தந்து சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தி இருந்தார்கள். அப்போது 20 பேர் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கி வந்து சிவாஜி கணேசன் கழுத்தில் போட்டு கௌரவித்து இருந்தார்கள். அப்போது விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் கூறியது, தவறு செய்வது என்பது மனித இயல்பு தான். தான் செய்த தவறை திருத்திக் கொள்வது தான் பெரிய விஷயம். ஃபிலிம் சிட்டி விழாவில் சிவாஜி சாருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்படவில்லை. நான் தவறு செய்துவிட்டேன் என்பதை உணர்ந்து இன்று சிவாஜி சாருக்கு மிகப் பெரிய விழா எடுத்து இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

Advertisement

அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன் என்று கூறியிருந்தார். இப்படி ஜெயலலிதா பற்றி பேசுவதை கேட்டு ஜெயலலிதாவும் அமைதியாக இருந்தார். பிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாது பற்றி பேசிய முதல் நடிகர் ரஜினிகாந்த் தான். பலரும் இது தெரிந்தும் அமைதியாக எதற்கு நமக்கு வம்பு என்று ஒதுங்கி இருந்தார்கள். ஏன் பத்திரிகையாளர்கள் கூட இதைப் பற்றி எதுவும் பேசவில்லை . ரஜினிகாந்த் உடைய இந்த பேச்சு மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வைரலானது. இப்படி மிக தைரியமான, துணிச்சலான மனிதர் தான் ரஜினிகாந்த். அதற்கு பிறகு ரஜினிகாந்த் மீது மிகப் பெரிய மரியாதையும் நம்பிக்கையும் எனக்கு வந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement
Advertisement