இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டி கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார் ரஜினி. சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் செய்த விமர்சனத்தால் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறாது. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனத்தில் ‘படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு முன்பு மேக்கிங் வீடியோ என்று அரை மணிநேரம் காண்பித்திருக்கிறார்கள். பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது. அதனால் இதை உலகிலேயே, தமிழகத்திலேயே, சினிமாவிலேயே என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று.

ஒரு இயக்குனர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் போதும். அதற்கு இந்த மாதிரி எல்லாம் சொல்வது அர்த்தமற்ற ஒன்று என்று படம் குறித்தும் பார்த்திபன் குறித்தும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியது.ப்ளூ சட்டையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

இதையும் பாருங்க : விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண உரிம பஞ்சாயத்து – Netflix வெளியிட்ட முதல் அறிக்கை இதோ.

பார்த்திபன் கொடுத்த விளக்கம் :

அதுசரி! எதுசரி என விளங்க.சார் don’t feel உங்க திறமையும் கடின உழைப்பும் எடுத்துக் கொண்ட முயற்சியும் வெற்றியை தர போகிறது தருகிறது சுலபமாக வெறும் விமர்சனம் மட்டும் அவர்களால் முடிந்தது போகட்டும் திருஷ்டி. அவ்வளவே மனதை சமநிலைக்கு கொண்டு ஒரு புண் (நகை) that’s பார்த்திபன் style. Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.

Advertisement

இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை. Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன்.குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன்.

Advertisement

தொடர்ந்து விமர்சித்து வரும் மாறன் :

அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்திமக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே என்று கூறி இருந்தார். இதனை ஏற்காத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இரவின் நிழல் படம் குறித்து விமர்சித்து வருகிறார்.

ப்ளூ சட்டை குறித்து ரஜினி :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்த ரஜினி, பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டியதோடு இரவின் நிழல் படம் குறித்து கைப்பட எழுதி அவருக்கு ஒரு கடிதம் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார். மேலும், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் எல்லாம் வருகிறது. அதிலும் நீங்கள் ஒரு விமர்சனத்திற்கு கொடுத்த பதில் நல்லா இருந்தது என்று ரஜினி தன்னிடம் கூறியதாக பார்த்திபன் கூறி இருக்கிறார்.

Advertisement