ரஜினிக்கு கொரோனா வைரஸ் – பிரபல நடிகர் போட்ட ட்வீட் – ஷாக்கான ரசிகர்கள்.

0
2114
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கும், நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “தர்பார்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் நயன்தாரா அவர்கள் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் இருக்கிறது என்று காமெடிக்காக பிரபல நடிகர் டுவிட் போட்டு உள்ளார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உள்ளது என்று பதிவிட்டு உள்ளார்.

- Advertisement -

இதனால் தற்போது கொரோனாவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று நகைச்சுவையாகவும் கூறி உள்ளார். இந்த டுவிட் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. மேலும், இதை பார்த்து ரஜினி ரசிகர்கள் எல்லோரும் பயங்கரமாக கொந்தளித்து போய் கடுமையாக விமர்சித்து வருகிறர்கள். இந்த கேவலமான வேலையை பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் தான் செய்து உள்ளார். இது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து நடிகர் ரோஹித் ராய் அவர்கள் இந்த டுவிட்டை நான் யாரையும் புண்படுத்துவதற்காக போடவில்லை என்றும் ரஜினியை வைத்து பதிவு செய்யப்படும் ஜோக்குகள் போல் நகைச்சுவைக்காக தான் இதை பதிவு செய்தேன் என்றும் விளக்கமளித்தார். எனது டுவிட் ரஜினி ரசிகர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று வருத்தம் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் எல்லோரும் அமைதி ஆனார்கள்.

-விளம்பரம்-
Advertisement