ரஜினிக்கு தங்கத் தாமரையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் – தேர்தல் நெருங்கும் வேலையில் அறிவித்த மத்திய அரசு. (அப்படி என்ன விருது)

0
1156
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னநனி நடிகராக திகழ்ந்து வரும் ரஜினி சினிமா துறையில் பல்வேறு விருதுகளை பெற்று இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  ’51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தாதா சாகேப் பால்கே விருதை பெரும் ரஜினிக்கு தங்கத் தாமரையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் . இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தமிழ் நடிகர்களில் ரஜினி இந்த விருதை பெற்றுள்ளார். இதனால் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ரஜினியின் திரைத்துறை நண்பரும் நடிகரும் மக்கள் நீதி மைய்ம் கட்சியின் தலைவருமான கமல் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல மோடி பதிவிட்டுள்ளதாவது பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ரஜினி, அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்த போது நடிகர் ரஜினி, பிஜேபியுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படி இருக்க தேர்தல் நெருங்கும் வேலையில் மத்திய அரசு ரஜினிக்கு இப்படி ஒரு விருதை அறிவிக்க என்ன காரணம் என்பது உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

Advertisement