படையப்பா ஷூடிங்கில் டச்சப் மேனாக மாறிய ரஜினி – யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ.

0
2993
padaiyappa
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்.நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் “படையப்பா”.மேலும், 1999 ஆம் ஆண்டு படையப்பா படம் தமிழ் திரை உலகில் வெளிவந்தது.அதுமட்டுமில்லாமல் படையப்பா படம் சினிமா துறை உலகில் வெளிவந்த தமிழ் படங்களிலேயே ஒரு பெரிய மாஸ் ஹிட் கொடுத்த படமாகும். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும், ஏ. எம். ரத்னம் அவர்கள் இந்த படத்தை தயாரித்தார்கள். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ், வடிவுகரசி, லக்ஷ்மி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சினிமா நட்சத்திரங்கள் கூட்டமே இருந்தது கூட சொல்லலாம்.மேலும், இந்த படம் 1996 இல் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ பட வசூலை முறியடிக்கும் அளவிற்கு ஓடியது. படையப்பா படம் திரையரங்கில் 100 நாளுக்கு மேல் ஓடி சாதனையும், வெற்றியையும், வசூலையும் பெற்றுத் தந்தது.

- Advertisement -

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக மறைந்த முன்னாள் நடிகை சௌந்தர்யா அவர்கள் நடித்திருந்தார்.முக்கியமாக இந்த படம் ஹிட்டாகும் அளவிற்கு காரணம் ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் தான்.மேலும், இந்த புகழ்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்திருந்தார்.அதுமட்டுமில்லாமல் ரம்யா கிருஷ்ணன் வாழ்க்கை சினிமா துறையில் உச்சத்திற்கு செல்வதற்கு இந்த நீலாம்பரி கதாபாத்திரம் தான். மேலும் ரஜினியின் சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது படையப்பா படம்.

padayappa-unseen

ஆனால், இந்த படத்தில் நடிகை நக்மா தான் கதாநாயகியாக நடிக்க இருந்தார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பைட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு மேக்கப் மேனாக மாறிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கனல் கண்ணன் இந்த படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement