இலங்கை குறித்து அன்று ரஜினி பேசியது இன்று நடந்தது – தற்போது வைரலாகும் ரஜினியின் பழைய வீடியோ.

0
942
rajini
- Advertisement -

இலங்கை நடக்கும் போராட்டம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்று பேசிய விஷயம் இன்று உண்மையாகி இருக்கிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகிறது. இலங்கையில் சில மாதம் காலங்களாவே பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். இலங்கையின் தலைநகர் கொழும்புரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கை பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. இதனால் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர். மேலும், இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ய கொழும்பு மையப்பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களின் போராட்டத்தை முடக்க பிரதமர் ராஜபக்ச ஆதரவாளர்கள் குண்டு வீசியும், தடியடி, கல் வீசியும் மக்களைத் தாக்கி இருந்தனர்.

- Advertisement -

இலங்கையில் நடக்கும் பிரச்சனை:

இதனால் இலங்கையில் கொழும்பு பகுதியில் பரபரப்பும், கலவரமும் நிலவி இருந்தது. இது மட்டுமில்லாமல் ராசபக்சே பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்திருந்தனர். இதனால் ராஜபக்ச பதவியிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது ராஜினாமாவை அறிவித்த சிலமணி நேரங்களிலேயே அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது கரை சேர்ந்த அவருடைய வீடு கொழுந்துவிட்டு தீப்பிடித்து எரிந்தது.

பிரதமரின் இல்லத்தில் நடந்தது:

அதோடு ராஜபக்ச வெளியேறுவதைத் தவிர அவரது இளைய சகோதரர் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ பதவியை தவறாக கையாண்டததற்காக பதவி விலகுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதனால் முன்னாள் பிரதமரின் இல்லத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் பயங்கர கலவரம் ஏற்பட்டு எல்லாம் தீக்கு இரையாகி இருக்கிறது. இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கையில் உள்ள மக்கள் படும் துன்பங்கள் குறித்து பேசி இருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இலங்கை மக்கள் குறித்து ரஜினி சொன்னது:

அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பது, எளிய மக்கள் கஷ்டப்பட்டால் எந்த நாடும் வளராது.எந்த நாடாக இருந்தாலும் அது வெற்றி பெறாது. மக்களின் ரத்தம் பூமியில் விழுந்தால் அந்த நாடே வளராது. எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் மக்கள் கஷ்டப்படக்கூடாது. அந்த பாதிக்கப்பட்ட மக்களின் சுவாசக்காற்று பட்டால் அந்த நாடு உருப்படாது. நீங்கள் பல பிணங்களை புதைக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அதை விதைக்கிறீர்கள். அந்த விதைத்த விதை நாளை உங்களை நிம்மதியாக வாழ விடாது.

அன்று ரஜினி சொன்னது:

யுத்தத்தை நிறுத்தி நல்ல முடிவு எடுத்தால் உங்களுக்கு நல்லது. மக்களுக்கு என்னுடைய சார்பில் 10லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ரஜினி அளித்த பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தலைவர் அன்று சொன்னது இன்று நிஜமாகி விட்டது என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement