ரஜினியை அடுத்து 23 வருடங்களுக்கு பின் டாப் ஹீரோவுடன் இணைந்த மீனா.

0
43066
Actress-Meena
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை மீனவர்கள் நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது ரஜினிகாந்த் படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள் என தகவல் வெளியானது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, ரஜினியுடன் க்ரீத்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை மீனா அவர்கள் தமிழ், மலையாளம் என இரண்டு மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடித்த படங்களில் நடிகை மீனாவுக்கு ஜோடியாக 80, 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ராஜ் கிரண். மேலும், என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரு ஆகிய படங்களில் நடிகை மீனாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் . இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை உலகிற்கு கொண்டார். 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதையும் பாருங்க : மாஸ்டர் மூலம் புதிய உச்சம் தொட்ட விஜய். வெளியாவதற்கு முன்பாகவே 70 கோடி லாபம். எப்படி தெரியுமா ?

- Advertisement -

இவர் அரண்மனைக்கிளி, என்ன பெத்த ராசா, நந்தா, அரண்மனைக்கிளி, பாண்டவர் பூமி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் படங்களில் ஹீரோவாக தான் நடித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் நல்லி எலும்புக்கு பெயர் போன்றவர் என்று கூட சொல்வார்கள். இவர் மண் மனம் மாறாத கிராமத்து கதைகளை தான் தேர்ந்து எடுத்து நடிப்பார். இவருடைய படங்கள் இன்னும் கூட மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது. சில காலம் இவர் சினிமா துறையை விட்டு விலகியிருந்தார்.

பின் பல வருடங்களுக்கு பிறகு தனுஷின் நடிப்பில் வெளிவந்த பவர் பாண்டியன் என்ற படம் மூலம் நடிகர் ராஜ் கிரண் ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார். அதற்கு பிறகு சண்டகோழி 2 படத்திலும் நடித்தார். தற்போது மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, ராஜ்கிரண் இருவரும் இணைந்து ஷைலாக் என்ற படத்தில் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழில் குபேரன் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை மீனா அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தை அஜய் வாசுதேவ் அவர்கள் இயக்கி உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Advertisement