மாஸ்டர் மூலம் புதிய உச்சம் தொட்ட விஜய். வெளியாவதற்கு முன்பாகவே 70 கோடி லாபம். எப்படி தெரியுமா ?

0
3001
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முடி சூடா மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்களை தெறிக்கவிட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 64வது படமான மாஸ்டர் படம் குறித்த பல தகவல்கள் இணையங்களில் வெளி வந்து உள்ளது. இந்த மாஸ்டர் படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

-விளம்பரம்-
Master

- Advertisement -

இவர்களுடன் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்கள். சமீபத்தில் தான் இந்த மாஸ்டர் படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் எல்லாம் வெளிவந்தது. போஸ்டர் வெளிவந்ததில் இருந்து இந்த மாஸ்டர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படத்தின் போஸ்டர் பார்க்கும் போது தளபதி விஜயின் அவர்களின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆக நடிப்பது என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்தது. அதனால் தான் இந்த படத்திற்கு மாஸ்டர் என்றுபெயரிட்டுள்ளனர் .

இதையும் பாருங்க :அச்சு அசலாக எம் ஜி ஆர் போலவே மாறியுள்ள அரவிந்த்சாமி. தலைவி படத்தின் புதிய டீஸர்.

இந்த படம் அதிரடியான ஆக்ஷன் படமாக அமையும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய்யின் சம்பளம் உட்பட 150 கோடி பட்ஜெட்டாக உருவாக்கப்பட்டு வந்தது பிகில் படம். ஆனால், பிகில் படத்தின் வியாபாரத்தை விட இந்த மாஸ்டர் படத்தின் வியாபாரம் அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள்.

-விளம்பரம்-
Image

அது தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி, தெலுங்கு உரிமை ரூ.10 கோடி, கேரளா உரிமை ரூ.9 கோடி, கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, ஹிந்தி & சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி, தமிழ் சாட்டிலைட் உரிமை ரூ.30 கோடி, தமிழ் டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி, ஆடியோ உரிமை ரூ.5 கோடி ஆகும். இதுவரை மொத்தம் 220 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றிருக்கிறது. படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி தான். இந்த படம் வெளியிடுவதற்கு முன்பாகவே சுமார் 70 கோடி ரூபாய் லாபத்தை பார்த்துள்ளார் நடிகர் விஜயின் உறவினரும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ. அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வியாபாரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் வியாபாரத்தை விட அதிகமாக நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement