பிறந்தநாளன்று அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்ற ரஜினி..!வரவேற்பை கொஞ்சம் பாருங்க..!

0
1268

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள பேட்ட படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி இருந்தது. நேற்று பிறந்தநாள் கொண்டத்தை முடித்துவிட்டு நேராக மும்பையில் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்றார் ரஜினி.

ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்’ என்ற சாதனையைப் படைத்துள்ளது, அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று  (டிசம்பர் 12) நடைபெற்றது.

- Advertisement -

இந்த திருமண விழாவில் இந்தியாவில் உள்ள பல்வேறு பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டாருக்கு தடபுடலாக வரவேற்பும் அளிக்கபட்டது. தற்போது அந்த விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

Advertisement