11 வருடத்திற்க்கு பின்னர் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராஜு சுந்தரம்.! ஹீரோ இவர் தான்.!

0
1043
Raju-sundaram
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஏகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார் பிரபல நடன இயக்குனரும் நடிகருமான டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்.

-விளம்பரம்-
Image result for raju sundaram

பிரபல நடன இயக்குனர் பிரபுதேவாவின் அண்ணனான ராஜு சுந்தரம், மணிரத்தம் இயக்கிய ரோஜா படத்தில் ‘ருக்குமணி ருக்குமணி ‘ என்ற பாடல் மூலம் திரையில் அறிமுகமானார் ராஜு சுந்தரம். அதன் பின்னர் தனது தம்பி பிரபு தேவா நடித்த ‘காதலன்’ படத்தில் சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார்.

இதையும் படியுங்க : முதன் முறையாக தனது இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரஜின்.! 

- Advertisement -

அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரிட்சயமான ராஜு சுந்தரம். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தம்பியாகவும் நடித்த இவர் சிம்ரன் நடித்த இ லவ் யூ டா என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

Image result for raju sundaram aegan

பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ராஜு சுந்தரம், அஜித்தை வைத்து ஏகன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளார் ராஜு சுந்தரம். ஆனால், தமிழில் இல்லை தெலுங்கில்.

-விளம்பரம்-
Image result for raju sundaram aegan

இந்த படத்தை ஏ கே என்டர்டைன்மன்ட் தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் அனன்யாவின் ஜோடியாக நடித்த ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Advertisement