முதன் முறையாக தனது இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரஜின்.!

0
2015
prajin
- Advertisement -

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார்.  

-விளம்பரம்-
https://www.instagram.com/p/BySDI7XhPXo/

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்குகடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்த சான்ட்ரா . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், எங்களிடம் பல பேர் இது தான் உங்கள் முதல் குழந்தையா என்று கேட்கின்றனர்.

இதையும் படியுங்க : சின்மயிக்கு படு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர்.! என்னடா இவ்ளோ வெறியா.! 

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் , “கண்ணுக்குள் , ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.  

-விளம்பரம்-

சென்ற ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார் இவரது கணவரான பிரஜின். விஜய் டிவி  சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி தந்த ‘சின்னத்தம்பி’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட சீரியல்களில் சின்னத்தம்பியும் ஒன்று. இது பிரஜினுக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது இந்த தொடர். 

கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு சில வாரங்களுக்கு முன்பு சாண்ட்ராவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement