சுஷாந்த் என் கனவில் வந்தார், எனக்கு மகனாக பிறப்பார். சர்ச்சை நாயகியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
8712
sushanth
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் சிங் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் மீது பாலியல் புகார் உள்ளது. இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் சிங் குறித்த ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, சுஷாந்த் சிங் என்னுடைய கனவில் வந்தார். மீண்டும் அவர் இந்த உலகிற்க்கு என்னுடைய மகனாக பிறப்பார் என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கரப் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து உன்னதமான மனிதரை கேவலப்படுத்தாதிறீர்கள். ஒருவரின் இழப்பை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். எப்படி உங்களால் வெட்கமில்லாமல் இப்படி எல்லாம் பேச முடிகிறது என்று ரசிகர்கள் தாறுமாறாக கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement