வெறும் 20 நிமிட காட்சியில் நடிக்க ராகுல் ப்ரீத் சிங் வாங்கிய சம்பளம்..!ஷாக்கில் தயரிப்பாளர்கள்..!

0
217
Rakul-Preet

நடிகர் கார்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ் தெலுகு ,மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Ntr poster

சென்ற ஆண்டு வெளியான ‘தீரன்’ படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட மௌஸ் வந்துவிட்டது. இவர் ஏற்கனவேய சூர்யாவுடன் என்ஜி கே என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுபோக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்திலும், கார்த்திக் நடித்து வரும் பெயரிடபடாதா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பழம் பெரும் நடிகர் என் டி ஆரின் வாழக்கை வரலாற்று படத்திலும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா இந்த படத்தின் என் டி ஆரின் கதாபாத்திரத்திலும், இந்தி நடிகை வித்யா பாலன் என் டி ஆரின் மனைவி கதாபாத்திரத்திலும் நடிக்கயுள்ளனர். மேலும், இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரமும் இடம்பெறுவதால் அதற்காக ராகுல் ப்ரீத் சிங்கை கமிட் செய்துள்ளனர்.

என் டி ஆர் படத்தில் ராகுல் ப்ரீத் சிங்:

Ntr

வெறும் 20 நிமிடமே வரும் ஸ்ரீதேவியின் கதாபத்திரத்திற்காக நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கும் 1 கோடி ருபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விப்ரி மீடியா தயாரித்து வரும் இந்த படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ண ஜகர்ளமுடி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ், தெலுகு போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.