‘இது இந்துக்களின் உணர்வை அவமதிக்கும் செயல் ‘ – பல எதிர்புகளுக்கு பின்னரும் புகைபடத்தை நீக்காத ராம்சரணின் மனைவி.

0
804
ramcharan
- Advertisement -

பொதுவாகவே நடிகர்கள் பேசும் சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் பெரிய பேசும் பொருளாக மாறி வருகிறது. எதார்த்தமாக, தற்செயலாக நடந்த விஷயத்தைக் கூட பரபரப்பான சர்ச்சை விஷயமாக நெட்டிசன்கள் மாற்றி விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் ராம்சரண் மனைவி உபஸ்னா பதிவிட்ட டீவ்ட் சோஷியல் மீடியாவில் பயங்கரமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் பல மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள RRR என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ராம்சரண் திரை பயணம்:

இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து வருகிறார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் வெளியாகும் முன்பே பல கோடிகள் வியாபாரம் ஆகி உள்ளது என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க,

ராம்சரண் – உபாசனா திருமணம்:

நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களையும், சமூகம் குறித்த கருத்துகளையும் பதிவிட்டு வருவார். இந்நிலையில் குடியரசு தினத்தில் வாழ்த்து சொல்ல உபசனா ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

உபாசனா பதிவிட்ட டீவ்ட்:

தற்போது அந்த டீவ்ட் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்து போட்டு இருந்தார்கள். அந்த வகையில் ராம்சரண் மனைவி உபாசனா காமினேனி டுவிட்டரில் போட்டோ ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் பலரும் அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தது. பின் அதில் அவர் “Let’s engage in building a progressive, more tolerant nation together through active involvement and inclusion without barriers. BTW see if u can spot RC and Me in this image” என்று குறிப்பிட்டிருந்தார்.

உபாசனா பதிவிட்ட டீவ்ட்டை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள் போட்டோவில் எங்கே ராம்சரண் மற்றும் அவர் மனைவி உபாசனா என லென்ஸ் வைத்து பார்த்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோவில் பலரும் காலில் ஷூ, செருப்புடன் இருப்பது பற்றி குறிப்பிட்டு உபாசனாவை மோசமாக திட்டி இருக்கின்றனர். மேலும், இது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. இப்படி உபாசனா போட்ட டீவ்ட்க்கு பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், ஒரே ஒரு போட்டோ போட்டதற்கு ராம்சரன் மனைவியை நெட்டிசன்கள் பயங்கரமாக வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு ராம்சரன் மற்றும் உபசனா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement