லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
https://twitter.com/ItzmeOffl/status/1354675920875868163
கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.அதே போல இந்த படத்தை இந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதில் விஜய் கதாபத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : சார்லிசாப்ளின் இன்ஸபிரேஷன் துவங்கி வடிவேலு, முரளிக்கு பின் விஜய்க்கு வந்த கதை - துள்ளாத மனம் துள்ளும் ரகசியம் சொன்ன இயக்குனர்.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்த விஜய்யின் ‘மாஸ்டர்’. இதனை #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகி உள்ளது.
https://twitter.com/RamCinemas/status/1355040430916730885
இருப்பினும் திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் திருநெல்வேலியில் பிரபல திரையரங்கான ராம் முத்துராம் திரையரங்கம், தற்போதும் மாஸ்டர் திரைப்படம் மூன்று காட்சிகள் திரையிடப்படுவதாக ட்வீட் செய்து இருந்தது. இதற்கு டுவிட்டர் வாசி ஒருவர், படத்துக்கு போட்ட பணத்தை திருப்பி எடுக்க எப்படியெல்லாம் பிச்ச எடுக்க வேன்டிருக்கு.. உங்கள நினைச்சா பாவமா இருக்குடஎன்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள திரையரங்கம் 'நீங்க பிளாப்னு கதறுற சுறாவே எங்களுக்கு லாபம் தான்' என்று பதிலடி கொடுத்துள்ளது.





