ராமநவமி கொண்டாட்டம்,மசூதியில் காவிக்கொடி ஏற்றம் – வீடியோவை ஷேர் செய்து BJP குஷ்பூ போட்ட பதிவு.

0
499
Kushboo
- Advertisement -

பீகாரில் மசூதி ஒன்றில் காவி கொடி ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

குஷ்பூவின் திரைப்பயணம்:

சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் குஷ்பூ நடித்திருக்கிறார். இதில் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பூ நடித்து உள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

குஷ்பூ அரசியல் பற்றிய தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். பாஜக செயற்குழு உறுப்பினராக குஷ்பூ இருக்கிறார். மேலும், குஷ்பு எப்போதும் சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது குறித்து நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ராமநவமியை ஒட்டி பலரும் காவி கொடியை கையில் ஏந்தியபடி வாகனங்களில் ஊர்வலமாக சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மசூதியில் காவி கொடி ஏற்றம் சம்பவம்:

அப்போது முசப்பூர் பகுதியின் முகமதுபூர் கிராமத்தில் உள்ள டக் பங்களா மஸ்ஜித் அருகே வந்தபோது இளைஞர் ஒருவர் மசூதியின் சுவர் மீது ஏறி கோபுரத்தில் காவி கொடியை கட்டினார். அங்கிருந்தவர்கள் இந்த செயலை தடுக்காமல் உற்சாகமாக கோஷம் எழுப்பி இருந்தார்கள். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முசாப்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த் கண்ட் தெரிவித்திருந்தார்.

குஷ்பு பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், ஆனால் இதற்கு பாஜக காரணம் எனக் கூறுபவர்களுக்கு மூளையை வைக்க வேண்டும். இது பாஜக செயல் அல்ல. எங்கள் கட்சி இதனை ஊக்குவிப்பதில்லை. நமது பிரதமர் மோடி சமத்துவம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதும் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். இப்படி குஷ்பு பதிவிட்டுள்ள பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement