ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் பட நடிகை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா. இவர் முதல் படத்திலேயே தமிழக மக்களின் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பிரபல நடிகை பானுப்ரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் ஹிந்தி டிவி தொடர்களில் நடிக்க சென்றுவிட்டார்.
இறுதியாக நடித்த படம் :
பிறகு பல ஆண்டுகளாக சினிமாவில் துறையில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் 1994ஆம் ஆண்டு ஒரு இந்தி படத்தில் நடித்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.
இனைய தொடர் :
தற்போது சாந்திப்பிரியா அவர்கள் ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.மேலும், இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
ஷாந்தி பிரியா போட்ட பதிவு :
இந்த நிலையில் தற்போது 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த நாட்டை தட்டிஎழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.