கரகாட்டகாரன் 2 படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்.! அவர் சொன்ன காரணம் இது தான்.!

0
2135

90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.

Image result for கரகாட்டக்காரன் 2

- Advertisement -

நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

இதையும் பாருங்க : கைவசம் 300 தியேட்டர் இருக்கு.! தைரியமாக வெளியிட தயார்.! ட்வீட் செய்த திமுக எம் எல் ஏ.! 

இன்றளவும் ராமாஜனின் பாடல்கள் கிராமத்து வாசிகள் மத்தியில் கேட்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ராமராஜன் இடையில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் ஆ தி மு க அணியில் இணைந்து தீவிர அரசியல்வாதியாகவும் அவதாரமெடுத்தார்.

-விளம்பரம்-
Related image

ராமராஜன் இறுதியாக 2012 ஆம் ஆண்டு ‘மேதை’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்திருந்தார். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து காரகாட்டகாரன் படத்தின் இரண்டாம் பாகம் தயராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கங்கை அமரன், கரகாட்டக்காரன் படத்தில் நடித்த அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஆனால், கரகாட்டக்காரன் 2 படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார் ராமராஜன். இதுபற்றி சமீபத்தில் பேட்டி அளித்துள்ள ராமராஜன் ‘கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கடந்த வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை’ 

Advertisement