வருங்காலத்தில் இது நடந்தால் நான் சினிமாவில் நடிப்பேன் – முதல்முறையாக தனது கம்பேக் குறித்து நடிகை ரம்பா

0
326
- Advertisement -

பிரபல நடிகை ரம்பா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் கார்த்திக்குடன் ஹீரோயின் ஆக ரம்பா நடித்திருந்தார். ஹீரோயினாக களம் இறங்கிய முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் ரம்பா. அதனைத் தொடர்ந்து ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், பூமகள் ஊர்வலம், ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ரம்பா திருமணம்:

இதனிடையே நடிகை ரம்பா கடந்த 2019 இந்திரகுமார் பிரேமாநந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சொந்தமாக மேஜிக் ஹோம் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் திறந்துள்ளார்கள். இந்த புதிய கிளையை நடிகர் ரம்பா மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள்.

ரம்பா செய்தியாளர்கள் சந்திப்பு:

கடை திறப்பு விழாவிற்கு பின் நடிகை ரம்பா செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ஏற்கனவே மேஜிக் ஹோம் நிறுவனத்தின் முதல் கிளை சென்னையில் செயல்பட்டு வருகிறது. தற்போது கோவையில் இரண்டாவது கிளையை திறந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை அடுத்து எனது சொந்த ஊரான விஜயவாடாவில் அடுத்த கிளையை திறக்க இருக்கிறோம். மேலும் 30-க்கும் மேற்பட்ட கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின் நடிக்காததற்கு காரணம்:

அதைத் தொடர்ந்து அவர், நான் எனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. அப்போது நான் சினிமாவில் நடித்தபோது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இப்போது இருக்கக்கூடிய கதைகளில் நடித்தால் எனது பிள்ளைகள் கூட விரும்பி பார்க்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பெண்களுக்கான நல்ல கதைகள் தமிழ் சினிமாவில் அமைவதும் இல்லை. வருங்காலத்தில் நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

பெண்கள் சமையலறையை ரசிக்க வேண்டும்:

மேலும், தங்களது பிசினஸ் குறித்து பேசிய ரம்பா, நடிகர் யோகி பாபு வீட்டில் சமையலறைக்கு எங்களது நிறுவனம்தான் டிசைனிங் செய்து வருகிறது. அதேபோல் பல பிரபலங்களின் வீடுகளில் நாங்கள் தான் டிசைனிங் செய்து வருகிறோம். தற்போது இருக்கக்கூடிய பெண்கள் சண்டை போடுவது, சமைப்பது போல தான் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், சமையலறை குறித்து யாரும் ரீல்ஸ் போடுவதில்லை, பெண்கள் அனைவரும் தங்கள் சமையலறையை ரசிக்க வேண்டும் என்று நடிகை ரொம்ப கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement