தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ரமேஷ் கண்ணாவும் ஒருவர். இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களிடம் துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் இயக்குனர், வசனகர்த்தா போன்ற பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவர் ஆண்பாவம், பூவேஉனக்காக, சூரியவம்சம், உன்னை நினைத்து போன்ற பல்வேறு படங்களில் துணை இயக்குனராகபணியாற்றி இருக்கிறார். அதேபோல இவர் கேஎஸ் ரவிக்குமாருக்கு துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

Advertisement

இவர் முதன்முதலில் காமெடியனாக அறிமுகம் ஆனது விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம்தான். மேலும், படையப்பா படத்தில் இவருடைய காமெடி மிகவும் கவனிக்கப்பட்டது. அதேபோல இவர் சூப்பர் ஸ்டார் நடித்த படங்களுக்கு மாஸ் வசனத்தைக் கூட எழுதி இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. முத்து படத்தில் வரும் நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன் என்ற வசனத்தை எழுதியது ரமேஷ் கண்ணா தான்.

அதேபோல படையப்பா படத்தில் போடா ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான் என்ற வசனத்தையும் எழுதியதும் ரமேஷ்கண்ணா தான். இப்படி ஒரு நிலையில் இவர் கோச்சடையான் படத்தில் எழுதிய வசனங்களை ரஜினி பேச மறுத்தாராம்ம். இது குறித்து பேட்டி அளித்துள்ள ரமேஷ்கண்ணா கோச்சடையான் படத்தில் ரத்தத்தின் ரத்தம் அப்படித்தான் இருக்கும், அந்த சூரியனே என்னை கேட்டுதான் எழும், விழும். போன்ற வசனங்கள் எழுதியபோது ரஜினி சார் என்னை முறைத்து பார்த்து. உன் மனதில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

Advertisement

நீயும் ரவிக்குமாரும் உங்க இஷ்டத்துக்கு எழுதி திங்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் இப்போ என்னடான்னா ரத்தத்தின் ரத்தம் சூரியன் உதிக்கும் எழுதுற அதெல்லாம் பேச முடியாதுன்னு சொல்லிட்டாரு பின்னர் எப்படியோ அவரை சமாதானம் செய்து அந்த வசனத்தை பேச வைத்தோம் என்று கூறியுள்ளார் ரமேஷ் கண்ணா

Advertisement
Advertisement