ஆபாச பட நடிகையாக மாறியா ரம்யா கிருஷ்ணன்.! ஹ்ம்ம் துணிச்சல் தான்.!

0
1472
Ramya-Krishnan

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படம் நல்ல திருப்புமுனை படமாக அமைந்தது. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து “ஆரண்யா காண்டம்” இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் “சூப்பர் டீலக்ஸ் ” என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்க : சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தல் வீடியோ..!

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு திருநங்கை கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு ஆபாச பட நடிகை கதாபத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிகை நதியா தான் நடிக்க இருப்பதாக இருந்ததாம். ஆனால், ஆபாச பட நடிகை கதாபத்திரம் என்றவுடன் அவர் இதில் நடிக்க மறுத்து விட்டாராம். பின்னர் தான் அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Advertisement