கடந்த சில நாள்களுக்கு முன்னால்தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுப் பலத்த வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என பலர் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்க அவரது அருகில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் நிற்கிறார். 'அன்று ஒரு நாள் ஷில்பா உடன் Director தியாகராஜன்குமாரராஜா' என்று வீடியோவை ட்வீட் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.அன்று ஒரு நாள் ஷில்பா உடன் Director தியாகராஜன்குமாரராஜா ??? @itisthatis #SuperDeluxe pic.twitter.com/bqV72yB9DA
— VijaySethupathi (@VijaySethuOffl) October 27, 2018





