இப்போ தான் பிரபல நடிகை, ஆரம்பத்தில் இவர் நடித்துள்ள படங்களை பாருங்க.

0
5403
ramya
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் துணை நடிகர்களாக சினிமாவில் தலை காண்பித்தவர்கள் தான். திரிஷா, சமந்தா, சாய் பல்லவி என்று பல நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான் அந்த வகையில் நடிகை ரம்யா நம்பீசனும் ஒருவர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார்.

-விளம்பரம்-

அதுவும் நயன்தாரா பணியாற்றிய அதே கைரலி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ குட் ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக விளங்கி வந்த ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த அந்த படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் சேரன் நடிப்பில் வெளியான ‘ராமன் தேடிய சீதை’ படத்திலும் சிறு ரோலில் நடித்துள்ளார். இவர் தமிழில் கதாநாயகையாக அறிமுகமானது, சக்தி நடிப்பில் வெளியான ‘ஆட்டநாயகன்’ என்ற படத்தின் மூலம் தான்.

அந்த படத்தை தொடர்ந்து இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி உள்ளார். அதில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தும் வருகிறார். தற்போது நடிகை ரம்யா நபீசன், ரியோ ராஜ் கதநாகனாக நடித்து வரும் ‘பிளான் பண்ணி பண்ணனும் ‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement