கும்கி 2வில் இவர் தான் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம் ! சரியான சாய்ஸ்- யார் தெரியுமா ?

0
2926

கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த படம் கும்கி. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் அதில் ஒற்றுப்போன ஒரு கதையையும் அழகாக எடுத்து சொல்லியது. இதனால் படம் ஹிட் ஆகி பாக்ஸ் ஆபீஸ் வசூல் குவித்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். மேலும் இந்த படம், 1971ல் ஹிந்தியில் வெளியான ‘ஹாதி மீரா ஷாதி’ என்ற படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.

அதே போல் கும்கி முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகள் இதில் நடிக்கப்பப் போவதில்லை எனவும் தெரிகிறது. தெலுங்கு நடிகர் ராணா டகுபாட்டி கும்கி-2வில் விக்ரம் பிரபுவிற்கு பதிலாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.