தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார் நடிகர் ராணா. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர். நடிகர் ராணாவிற்கும் நடிகை திரிஷாவுக்கும், இடையில் காதல் என தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் செய்தி வந்தது. ஆனால், இதுகுறித்து இருவருமே மௌனம் சாதித்து வந்தனர்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராணாவிடும் திரிஷாவுடனான காதல் குறித்து கேட்கப்பட்டது. முதலில் மழுப்பலான பதிலை சொன்ன ராணா, பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் டேட்டிங் கூட சென்றிருக்கிறோம்.
ஆனால், சில பல காரணங்களால் எங்களுக்குள் உறவு நீடிக்கவில்லை என்றுகூறி இருந்தார். இந்த நிலையில் தனது காதலியை அறிமுகம் செய்து வைத்து அணைத்து வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராணா. சமீபத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘அவங்க சரினு சொல்லிட்டாங்க’ என்று குறிப்பிட்டு இருந்தார் ராணா.
சமீபத்தில் ராணா டகுபதி- மிஹீகா பாஜாஜ் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் ராணா. இதனால் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டது என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. ஆனால், தனது மகனுக்கு திருமண நிச்சயம் நடைபெற இல்லை என்று ராணாவின் தந்தை சுரேஷ்பாபு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. திருமணத்துக்கு பிந்தைய மற்றும் முந்தைய நிகழ்ச்சிகளுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இரு குடும்பங்களும் இன்று விவாதித்தன. இது தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்” என்று கூறியுள்ளார். ஆனால், விரைவில் ராணாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது.