சில தினங்களுக்கு முன் தினமலர் வெளியிட்டு இருந்த செய்தியால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் வேலைக்குச்செல்லும் பெற்றோர் காலை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் சிரமம் குறைக்கப்படும் என்றும், வறுமை காரணமாக பள்ளிக்கு சாப்பிடாமல் வரும் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்று வரவேற்பு கிடைத்தது.

வாரத்தில் 5 நாட்கள் வழங்கப்படும் இந்த காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டு சில வாரங்கள் ஆகிறது. அதனை விமர்சித்து  முன்னணி அச்சு ஊடகமான தினமலர் அதனை அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து இருந்தது. அதற்க்கு தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள், பாராளமன்ற உறுப்பினர்கள்  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்க்கு பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே தற்போது விளக்கம்மும் அளித்துள்ளார்.

Advertisement

முதல்வரின் மற்றும் அமைச்சர் கண்டனம்:

உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்?

எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! என்று கண்டனங்களை தெரிவித்து இருந்தார். அமைச்சர் உதயநிதி “கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!” என்றும் கண்டங்களை தெரிவித்து இருந்தார்.

Advertisement

ரங்கராஜ் பாண்டே விளக்கம்:

இது பற்றி கூறிய ரங்கராஜ் பாண்டே “அந்த செய்தியானது தினமலரின் ஈரோடு மற்றும் சேலம் பதிப்பில் மட்டுமே அந்த செய்தி வெளியானது. தினமலருக்கு பத்து பதிப்புகள் இருக்கிறது அதில் இரண்டில் மட்டும் தான் அது போல வந்துள்ளது. 7 பதிப்பின் எடிட்டர் கீ. ராம சுப்பு அதற்க்கு எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இது போன்ற செயலை வேண்டுமென்று செய்ய மாட்டார்கள். நான் அதில் 16 வருடம் பணியாற்றி உள்ளேன். அவர்களிடம் ஐந்து ஆறு பிரிவுகள் இருக்கிறது.

Advertisement

அதில் ஒன்றில் நடப்பது மற்றொன்றுக்கு தெரியாது. இதை மோசமாக நிறைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளனர். நிறைய அரசியல் வாதிகள் பேசி உள்ளனர். திமுகவில் இருக்கும் பல தலைவர்களை பாருங்கள். அவர்கள் மேடைகளில் எவ்வளவு அவதுறாக பேசியுள்ளார் என்று பாருங்கள். முக்கிய தலைவர்களே அவ்வாறு மேடைகளில் பேசியுள்ளனர். ஆனாலும் தினமலர் இவ்வாறு செய்தி வெளியிட்டது தவறு தான்” என்று கூறினார்.

Advertisement