தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் தல, ஒரு சீட்டு தள்ளி அமர்ந்திருக்கும் தளபதி – வைரலாகும் Unseen புகைப்படம்.

0
2077
Vijay-ajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இறுதியாக கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனாது. அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை.

-விளம்பரம்-

ஆனால், அவர் வெளியில் வந்தாலே அவரை புகைப்படம் எடுப்பது வீடியோ எடுப்பது என்று ரசிகர்கள் செய்து கொண்டு தான் வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த அஜித்தை ரசிகர்கள் பலரும் சூழ்ந்து புகைப்படம் எடுத்தனர். இதனால் கடுப்பான அஜித், ரசிகர் ஒருவரின் செல் போனை புடிங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.

- Advertisement -

அதே போல மருத்துவமனைக்கு வந்த அஜித்தை வீடியோ எடுத்ததால் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார் அஜித். இப்படி ஒரு நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் விஜய் மற்றும் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய்க்கு ஒரு சீட்டு தள்ளி அமர்ந்து கொண்டு இருக்கிறார் அஜித். தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தும் இருந்தனர். அதன் பின்னர் இவர்கள் இருவரையும் ஒன்றாக திரையில் சந்திக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-
Advertisement