20 வருடத்திற்கு முன் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது. தற்போது வைரலாகும் புகைப்படம்.

0
25158
Trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு பிரசாந்த்– சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் திரிஷாசினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், கிரீடம், பீமா, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, அரண்மனை-2, 96, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை திரிஷா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நீ எப்பயும் தோல்வியான ப்ராடக்ட் தான். புதிய லுக்கை கிண்டல் செய்த்தவருக்கு சாந்தனு பதில்.

1999ஆம் ஆண்டு நடிகை திரிஷா அவர்கள் மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்தார். இந்த மிஸ் சென்னை மூலமாக தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவரின் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்ப இருக்கும் திரிஷாவா !! ஆள் அடையாளமே தெரியவில்லை என்று வியந்து போய் உள்ளார்கள்.

-விளம்பரம்-

தற்போது நடிகை திரிஷா வரலாற்று சிறப்புமிக்க நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. அதோடு இவர் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து உள்ளார். இந்த படமும் கூடிய விரைவில் வெளியாக போகிறது.

Advertisement