உடல் எடையை குறைத்த நடிகை ரஷி கண்ணா. படத்திற்காக கூட இல்லை, இதற்காக தானாம்.

0
6283
Rashi-Khanna
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராசி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராசி கண்ணா. இவர் இந்தி சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானர். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ராசி கண்ணா அவர்கள் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் காதலியாக தமிழில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
View this post on Instagram

“Listen to that silence.. it has so much to say..” – #rumi

A post shared by Raashi (@raashikhannaoffl) on

இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே தான் நடித்து வருகிறார். இங்கு நமக்கு நடிகை ஹன்சிகா எப்படியோ அதே போல் தெலுங்கில் ராசி கண்ணா. அதனால் நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா உலகில் நுழையும் போது நடிகை ராசி கண்ணா அவர்கள் பப்ளியாக கொஞ்சம் குண்டாக இருப்பார்.

இதையும் பாருங்க : இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படப்பிடிப்பில் மியா கலீபா. டேனி பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

இந்த குண்டான உடல் தனது ரசிகர்களுக்கு பிடித்தாலும், பலருக்கு பிடிக்கவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்தார் ராசி கண்ணா. இதனால் சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் இவர் மீது வந்தது என்று கூறப்படுகிறது. அதனை எல்லாம் தகர்த்தெறியம் வகையில் தற்போது தனது உடலை மிகவும் குறைத்து உள்ளார் நடிகை ராசி கண்ணா. இதனை பார்த்த பலர் நடிகை ராசி கண்ணாமருத்துவ உதவியின் மூலம் ஆபரேஷன் செய்து உடலை குறைத்து இருப்பாரோ? என்றும் கூறினர்.

இந்நிலையில் நடிகை ராசி கண்ணா அவர்கள் தன்னுடைய உடல் எடையை குறைப்பது பற்றி சமீபத்தில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, உயரத்திற்கேற்ற பருமன் இருந்தால் தான் நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இதனால் தான் நான் கடுமையான உடற்பயிற்சியை செய்து பருமனை குறைத்தேன். கடுமையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு பழக்கம் ஆகியவற்றை கடைபிடித்ததால் தான் எனது உடம்பு தற்போது குறைந்து உள்ளது என்று கூறினார். அதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தனர். நடிகை ராசி கண்ணா அவர்கள் தெலுங்கில் வேர்ல்ட் பேமஸ் லவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு தமிழ் மொழி படங்களிலும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement