தமிழுக்கு வரும் ராஷ்மிகா மந்தனா.! முதல் படமே இந்த டாப் ஹீரோவுடனா.!

0
1477
Rashmika-Mandana
- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார். தற்போது தெலுங்கில் இரண்டு படம் கன்னடத்தில்  இரண்டு படமென்று படு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே விஜய் 63 படத்தில் நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அது நடக்காததால் இவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது இவர் கார்த்திக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

தேவ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் ராஷ்மிகா. இதனைபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement