விஜய்யுடன் நீங்கள் நடிப்பீர்களா..? ராஷ்மிகா என்ன சொல்றாங்க புரியல.! நீங்களே சொல்லுங்க

0
625
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் எந்த அளவிற்கு ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும். வளர்ந்து வரும் பல நடிகைகள் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயுடன் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் வித்யாசமாக பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கில் இரண்டு படம் கன்னடத்தில் இரண்டு படமென்று படு பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா, தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகை ராஷ்மிகாவின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், எப்போது நடிகர் விஜய்யுடன் நீங்கள் நடிக்கப்போகிறீர்கள் ? என்று கேள்விகேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது போல கண்ணில் ஹார்ட்டுடன் புன்னகைக்கும் எமோஜி ஒன்றை பதிவிட்டு பதிலளித்துள்ளார்.

Advertisement