தயாரிப்பாளர்களுடன் தன் நாய்க்கும் Flight டிக்கெட் போட சொல்லும் ராஷ்மிகா ? – செய்தியை பார்த்துவிட்டு அவர் கொடுத்த விளக்கம்.

0
370
rashmika
- Advertisement -

தன்னை பற்றி தவறாக பதிவு போட்டவருக்கு ராஷ்மிகா பதிலடி கொடுத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார்.

-விளம்பரம்-

பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

புஸ்பா படம்:

இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

விஜய் படத்தில் ராஷ்மிகா:

மேலும், ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ படத்தில் ராஸ்மிகா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ராஷ்மிகா பற்றி வந்த வதந்தி:

இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தற்போது இந்த படத்தின்வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தன்னைப்பற்றி வந்த வதந்திக்கு ராஷ்மிகா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஷ்மிகா அவர்கள் aura என்ற நாயை வளர்க்கிறார். அந்த நாய் இல்லாமல் ராஷ்மிகா எங்கும் செல்ல மாட்டார்.

ராஷ்மிகா பதிவு:

இதனால் இவர் விமானத்தில் எங்கு சென்றாலும் நாயுடன் செல்வதற்கு டிக்கெட் வேண்டும் என்று கறாராக தயாரிப்பாளர்களிடம் கேட்டு வருவதாக பதிவு ஒன்று வெளியாக இருக்கிறது. இந்த செய்தியை பார்த்த ராஷ்மிகா அவர்கள், சிரித்துக் கொண்டே அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. aura எப்போதும் என்னுடன் டிராவல் பண்ண விரும்புவதில்லை. அவள் சந்தோசமாக ஹைதராபாத்தில் இருக்கிறாள். என்னைப் பற்றி யோசித்து இப்படி பதிவிட்டதற்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement