ராஷ்மிகா மந்தனாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு ஓடிய நபர். ஷாக்கிங் வீடியோ இதோ.

0
48956
rashmika
- Advertisement -

“இன்கேம் இன்கேம் காவாலி” என்ற ஒரு பாடல் மூலம் இன்றைய இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக பிரபலம் அடைந்தவர். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர்.

- Advertisement -

இதையும் பாருங்க : அங்கு ஷூட்டிங்கிற்கு போவாதீங்க. புலம்பி தள்ளிய பிகில் பட நடிகை.

தற்போது நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. நடிகை ராஷ்மிகா அவர்கள் தமிழ் மொழி படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை தன் பக்கம் கட்டி இழுத்தவர். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் நடிகை ராஷ்மிகா அவர்கள் கலந்து கொண்டார்.அப்போது ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனாவை பின் தொடர்நது வந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்.

-விளம்பரம்-

ரசிகரின் இந்த எதிர்பாராத செயலால் அங்கே சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கொஞ்சம் ஷாக் அடைந்து விட்டார்கள். மேலும், அந்த நபரை துரத்தி பிடிக்கவும் முயற்சி செய்தார்கள். ஆனால், ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் பதற்றம் அடைந்தாலும் பின்னர் கொஞ்சம் கூல் ஆகிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement