அங்கு ஷூட்டிங்கிற்கு போவாதீங்க. புலம்பி தள்ளிய பிகில் பட நடிகை.

0
20594
amirtha
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இரவு படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைக் குறித்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அம்ரிதா ஐயர் தன் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பது. இது மிகவும் வருத்தத்தை தருகிறது. இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு பிகில் படத்தின் படப்பிடிப்பிலும் நடந்தது. இதை போலவே பிகில் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நபரின் மீது லைட் தவறி விழுந்து இறந்து விட்டார் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னும் இப்படி ஒரு கிளாமரான ஆடையில் தாழம்பூ சீரியல் நடிகை சாந்தினி.

பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பாப்பான்சத்திரத்தில் 2012 ஆம் ஆண்டு ஈவிபி பொழுதுபோக்குப் பூங்கா தொடங்கப்பட்டது. பொழுதுபோக்கு பூங்காவிற்குள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது என புகார் எழுந்ததை தொடர்ந்து தொடங்கிய வேகத்திலேயே பூங்கா மூடப்பட்டது. மீண்டும் பொழுது போக்கு பூங்கா செயல்படத்தொடங்கிய போது விபத்துகள் அடுத்தடுத்து நடக்கத் தொடங்கின. முதலில் அபியாமெக் என்ற விமான பணிப்பெண் ராட்டினத்தில் இருந்து விழுந்து இறந்து போனார். பின் பூங்கா மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூடப்பட்ட பொழுது போக்கு பூங்காவை படப்பிடிப்பு தளமாக உபயோகிக்க தொடங்கினார்கள். பிறகு ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து போனார்.

-விளம்பரம்-

மற்றொருவர் அங்கு இருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்திற்கு கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப் பட்ட போது ராட்சத கிரேன் மூலம் மின்விளக்கு பொருத்தப்பட்டது அப்போது கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் இறந்து போனார். தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து 3 பேர் இறந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் இந்த படப்பிடிப்பின் போது யாராவது ஒருத்தர் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இந்த உயிர் இழப்புக்கும், பரபரப்புக்கும் ஆண்டுதோறும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இப்படி பல பேர் உயிர்களை வாங்கிய இந்த ஈவிபி இடத்தை குறித்து தற்போது பலவிதமான(போய்,பூதம்) சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

Advertisement