“200 கோடி பட்ஜெட், 2 வருஷமா எடுத்து இத பார்க்க ஆளில்லயா ?” – புஷ்பா படத்தில் நேஷ்னல் கிரஷ் பேருக்கு வந்த சோதனை.

0
404
rashmika
- Advertisement -

சமீப காலமாகவே தமிழில் பிற மொழி படங்கள் நேரடியாக தமிழில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாகி வருகிறது. பாகுபலி படத்திற்கு பின்னர் தெலுங்கில் வெளியாகும் பல படங்கள் நேரடியாக தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. அப்படி வெளியான பல படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம். தென்னிந்திய சினிமா உலகில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது .

-விளம்பரம்-

இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும், ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதோடு இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

5 மொழிகளில் வெளியான புஷ்பா :

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. புஷ்பா திரைப்படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது . முதல் பாகம் தெலுங்கு, தமிழ் என பல மொழி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாடலால் எழுந்த சர்ச்சை :

மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பல விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற சமந்தா நடனம் ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டாலும் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தும், இந்த பாட்டை நீக்க வேண்டும் என்று படக்குழுவினர் மீது புகார் அளித்தும் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

-விளம்பரம்-

200 கோடி, ஆனா இத கவனிக்க ஆளில்ல :

அதேபோல் வாயா சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடியிருந்தார். அந்த பாடலில் அவர் படு கிளாமராக இருந்தார் என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் புதிதாக புஷ்பா படத்திற்கு ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அது என்னவென்றால், புஷ்பா படத்தின் இறுதியில் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் பெயரை ராஷ்மிகா மடோனா என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர் ஒருவர் அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து, 200 கோடி பட்ஜெட்டில் இரண்டு வருஷ உழைப்பில் உருவாகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகியின் பெயரை இப்படியா பதிவிடுவது?

மந்தனாவா – மடோனாவா :

மந்தனாவை – மடோனா என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இதைக்கூட படக்குழுவினரால் கவனிக்க முடியவில்லையா? என்று விமர்சித்து இருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகா மந்தனாவின் பெயரை மடோனா என்று டைப் செய்து பயங்கரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. என்னத்தான் படக்குழுவினர் சொல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement