‘இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ வடிவேலுவுடன் தன்னை இணைத்து வெளியான மீம் குறித்து ராஷ்மிகா.

0
53736
rashmika
- Advertisement -

சினிமாவில் ஒரே ஒரு பாடல் மூலம் பிரபலமடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 

-விளம்பரம்-
Image result for rashmika mandanna vadivelu meme

- Advertisement -

அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார்.அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலி என்ற பாடல் அனைவரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சிலும் ஆக்கரமிப்பு செய்தது. தற்போது தமிழ் தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரெமோ பட இயக்குனர் இயக்கி வரும் ‘சுல்தான்’ என்ற படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : அப்போ ஒரு பத்தாவது படிக்கற பொண்ணு வயசு தான் எனக்கு. என் அம்மாவிடம் புலம்பினேன் – நடிகை அதிர்ச்சி பேட்டி.

-விளம்பரம்-

இது தான் இவரது முதல் தமிழ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தான் முதலில் விஜய் 63 படமான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால், இவருக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் தனது சுட்டித்தனமான பேச்சால் அனைவரையும் ஈர்த்து வருகிறார். அதிலும் கார்த்தியின் ‘சுல்தான்’ பட பூஜை விழாவில் இவர் தமிழில் பேசி அசத்தியது அனைவரையும் கவர்ந்தது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். மேலும், இவ்ருடைய புகைப்படத்தையும் வடிவேலுவின் புகைப்படத்தையும் வைத்து உருவான சில மீம்கள் வைரலானது. அந்த மீம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா, இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன், வடிவேலு சார் ரொம்ப க்யூட்டா இருக்காரு என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement