தனுஷ் படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட ராட்சசன் ராம்குமார்..!

0
582
Ratchasan

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘முண்டாசுப்பட்டி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராம் குமார் இயக்கிய “ராட்சசன்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் கூட்டணியில் இரண்டாவது வெளியான இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் குமார் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

Ramkumardhansuh

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ராட்சசன் படத்தின் விழாவில் பேசிய இயக்குனர் ராம் குமார் , தன்னுடைய அடுத்த படம் நடிகர் தனுஷுடன் தான் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து ராம் குமார்- தனுஷ் கூட்டணியில் உருவாக போகும் படம் குறித்து பல்வேறு கிசுகிசுக்களும் வெளியாகி இருந்தது.

அதே போல இயக்குனர் ராம் குமார் தனுஷை வைத்து இயக்கம் படத்தில் நடிகை லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார் என்று வதந்திகள் பரவியது.ஆனால், இந்த தகவலை முற்றிலும் மறுத்து இயக்குனர் ராம் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் தனுஷ் தற்போது சரத் குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் போன்ற மல்டி ஸ்டார்களை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார். அது போக “மாறி 2” படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement