ரத்னமா? ரம்பமா? – எப்படி இருக்கிறது ‘ரத்னம்’ படம் – முழு விமர்சனம் இதோ

0
248
Rathnam
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜூலி. இவருடைய உண்மையான பெயர் விசாலாட்சி. ஆனால், ஜூலி என்றால் தான் எல்லோருக்குமே தெரியும். இவர் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை சீரியல் வாய்ப்பு கிடைத்திருந்தது. பின் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸ் வரும் ஆவார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். அதை தொடர்ந்து சீரியலில் பிசியாக நடித்து இருந்தார் ஜூலி. திடீரென்று சில ஆண்டுகள் ஜூலி காணாமல் சென்று விட்டார். பின் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி இருந்த சத்யா, சத்யா சித்திரம் பேசுதடி என்ற சீரியல்களில் கமிட்டாகி நடித்து இருந்தார் ஜூலி. ஆனால், யார் கண் பட்டதோ இந்த இரு சீரியல்களும் முடிந்துவிட்டது. இதனிடையே இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ஜூலி குறித்த தகவல்:

மணிகண்டன் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் இவருடைய ஆசை. இதற்கான முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஜூலி கர்ப்பமாக இருக்கிறார். இதனால் இவர் மெட்டர்னிட்டி பிரேக் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் இவருக்கு வீட்டிலேயே எளிமையாக ஐந்தாவது மாதம் பூச்சூடல் நிகழ்வும் நடந்திருக்கிறது. இந்த நிலையில் பிரபல சேனலுக்கு ஜூலி பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர், எங்க ரெண்டு பேருக்குமே இந்த குழந்தை ரொம்ப ஸ்பெஷல்.

ஜூலி பேட்டி:

காரணம், எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது. முதலில் நான் கர்ப்பமாக இருந்தேன். அது அபார்ட் ஆகிவிட்டது. இரண்டாவது முறை கர்ப்பமானேன். அப்போது கர்ப்பப்பை ட்யூபில் குழந்தை இருப்பதால் அதை அபார்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை. மூன்றாவது முறை டெஸ்ட் கொடுத்துவிட்டு ரிசல்ட் வர வரைக்குமே நாங்க ரெண்டு பேரும் பயந்து கொண்டு இருந்தோம். கன்ஃபார்ம் ஆனதும் ஹாஸ்பிடலிலேயே இரண்டு பேரும் அழுந்து விட்டோம். அதோடு சிலர் வயதாகிவிட்டது, இதுக்கு மேல எப்படி என்றெல்லாம் சொன்னார்கள்.

-விளம்பரம்-

குழந்தை குறித்து சொன்னது:

எனக்கு இவரை சந்தோஷப்படுத்தணும். இவருடைய பிரண்ட்ஸ் எல்லாம் குழந்தையோடு இருக்கும்போது இவர் மட்டும் தனியா நிற்பதை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். எங்களுக்கு ட்ரீட்மென்ட் மூலமாக தான் இப்ப குழந்தை பிறக்கப் போவது. எனக்கு 42 வயதாகிவிட்டது. இதனாலே நிறைய ஃபங்ஷனுக்கு எங்களால் போக முடியாது. பலருமே இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்பார்கள். அது ரொம்ப மன வேதனையை கொடுத்தது. இதனால எந்த பங்க்சனுக்குமே போக மாட்டேன். சில தினங்களுக்கு முன்புதான் பூச்சூடல் நிகழ்வை வைத்திருந்தோம்.

கணவர் குறித்து சொன்னது:

இந்த தருணத்திற்காக ரொம்பவே நாங்கள் ஏங்கி இருந்தோம். அதோட குழந்தை அபார்ட் பண்ணும் போதெல்லாம் நான் ரொம்ப டிப்ரசனுக்கு போய்விடுவேன். என்னுடைய கணவரும், என் குடும்பம் தான் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணி என்னை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் கர்ப்பமாகும் போது அதிகமான தைரியம் வேணும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொண்டால் சீக்கிரமாகவே குழந்தை பெத்துக்கோங்க, எப்பவும் தள்ளி போடாதீங்க. வயதானால் கர்ப்பமானால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. என்னுடைய கணவர் அதர்வா உடைய படம் போயிட்டு இருக்கிறது. அது தவிர கதை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கிறார். இவரை சீக்கிரம் இயக்குனர் மணிகண்டனாக பார்க்க வேண்டும் என்பது ஆசை. நான் ரொம்ப நாளாக டான்ஸ் ஸ்கூல் ஓப்பன் பண்ணனும் என்று நினைக்கிறேன். இப்போ ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவிலேயே வரும் என்று சந்தோஷத்துடன் கூறியிருந்தார்

Advertisement