ராட்சசன் திரைவிமர்சனம்

0
743
Ratsasan-review

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள “ராட்சசன் ” படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

Ratsasan

படம்:- ராட்சசன்
இயக்குனர்:- ராம் குமார்
நடிகர்கள்:- விஷ்ணு விஷால், அமலா பால், ராதாரவி, முனீஷ்காந்த், சூசன், காளி வெங்கட்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
தயாரிப்பு:- Axess பிலிம் பேக்டரி
வெளியான தேதி:- 04-10-18

கதைக்களம்:

பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ராம் குமார். படத்தின் ஹீரோ சினிமாவில் எப்படியாவது ஒரு சிறந்த இயக்குனராக வர வேண்டும் என்று ஒரு லட்சியத்தோடு இருந்து வருகிறார். அதிலும் ஒரு சைக்கோ திரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ratchasan

ஆனால், தான் நினைத்து போல இயக்குனராக வரமுடியாததால் இன்னும் எத்தனை நாட்கள் சும்மவே இருக்க போற பேசாம போலீஸ் அதிகாரியா மாறிடு என்று ஹீரோவின் அக்கா கணவரான முனீஸ்காந்த் கூற பின்னர் போலீசாக மாறிவிடுகிறார் விஷ்ணு. போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்கே உயரதிகாரியாக இருக்கும் சூசன் விஷ்ணுவை அடிக்கடி வெறுப்பேற்றுகிறார். சைக்கோ திரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விஷ்ணு விஷாலுக்கு கிடைக்கும் முதல் சைக்கோ கொலைகாரனின் கேஸ் ஒன்று கிடைக்கிறது.

இதுவரை படம் எடுப்பதற்காக சைக்கோ திரில்லர் பற்றி ஆராய்ந்து வந்த விஷ்ணு விஷாலுக்கு சென்னையில் 15 வயது பள்ளிச்சிறுமிகளை மட்டும் தேர்வு செய்து வரிசையாக கொலை செய்து வரும் சைக்கோ கொலைகாரனை பிடிக்கும் பொறுப்பு கிடைத்தவுடன் மும்மரமாக போலீஸ் பணியில் இறங்கிவிடுகிறார். ஆனால், அவரது உயரதிகாரியான சூசன் சீனியர் என்ற திமிரை அடிக்கடி விஷ்ணு விஷால் மீது காட்டி அவரை மட்டம் தட்டிகொண்டே இருக்கிறார். மேலும், விஷ்ணு சொல்வதை உயரதிகாரி என்ற கார்வத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் சூசன் இருப்பினும் அந்த சைக்கோ கொலைகாரனை சூசன் பிடித்த பாடில்லை.

ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலின் அக்கா மகள் சைக்கோ கொலைகாரனால் கடத்தப்பட சூசனின் பேச்சை கேட்காமல் தானே களத்தில் குதிக்கிறார் விஷ்ணு விஷால். இறுதியில் அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடித்து தனது அக்கா மகளை காப்பற்றுகிறாரா என்பது தான் கதை.

படத்தின் ப்ளஸ்:

படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் காட்சியில் ஒன்றி நடித்துள்ளனர். படத்தின் ஹீரோ பிட்டன போலீஸ் தோற்றத்தில் இல்லை என்றாலும் கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளார். மேலும், துணை நடிகர்கள் முனிஷ் காந்த், ராதாரவி, காளி வெங்கட் போன்ற நடிகர்களின் நடிப்பு சபாஷ். படத்தி இசை த்ரில்லர் படத்திற்கு ஏற்றார் போல கதையோடு ஒன்றியுள்ளது. மேலும், ஒளிப்பதிவும் மிகவும் அருமை.

படத்தின் மைனஸ்:

படத்தில் அமலா பாலிற்கு கம்மியான காட்சிகள் இருந்தலும் அவர் வரும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது. படம் முடியும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்துவிட்டாலும் படம் மேலும் நீள்வது கொஞ்சம் இழுவையாக உள்ளது. ஆனாலும் ஓகே தான் மற்றபடி பெரிதாக குறை ஒன்றும் இல்லை.

Ratsasan-teaser

படத்தின் இறுதி அலசல்:

ஒரு சைக்கோ த்ரில்லர் படத்திற்கு தேவையான சஸ்பென்ஸ்,எதிர்பாராத திருப்பங்கள் என்று அணைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ஒரு படமாக இருக்கிறது. சஸ்பென்ஸ் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக ஒரு விருந்தாக அமையும். மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 7.5/10