மாமன்னன் படத்தில் டப்பிங் கலைஞர் ரவீனா ரவியின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி. இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அதிலும், ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ரவீனா குரல் கொடுத்து இருக்கிறார்.

மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுத்து உள்ளார். அதேபோல் ரவீனா தாய் ஸ்ரீஜா அவர்களும் சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரவீனா அவர்கள் ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

Advertisement

கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை ரவீனாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாரட்டுக்கள் பெற்று இருந்தது. அதோடு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று இருந்தது.

மாமன்னன் படம்:

இதனை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ரவீனா நடித்து இருக்கிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

Advertisement

மாமன்னன் படத்தில் ரவீனா ரவி :

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். நேற்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் மாமன்னன் பட குழுவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.மேலும், இந்த படத்தில் பகத் பாசிலின் மனைவியாக ரவீனா நடித்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் இவர் சில காட்சிகள் மட்டும் நடித்து இருக்கிறார். ஆனால், அதிலும் அவர் வசனம் எதுவும் பேசவில்லை. இது குறித்து இணையத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Advertisement

ரவீனா ரவி கொடுத்த விளக்கம்:

இந்த நிலையில் இது குறித்து ரவீனா ரவி கூறியது, மாமன்னன் படத்தில் நான் பகத் பாசிலின் ஜோடியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் குறைவான நேரம்தான் நான் திரையில் வருவேன். ஆனால், வசனங்களும் கிடையாது. இருந்தாலும், பிரபலமான நடிகர்களுடன் நடித்ததை நினைத்து நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன். அதுமட்டுமில்லாமல் திறமையான பட குழுவினர், ஏ ஆர் ரகுமான் இசை, மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் என அனைவரிடமும் பணியாற்றியது ரொம்ப சந்தோசம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement