கேஜிஎப் பட நடிகை மீது தாக்குதல், சத்தம் போட்டு அலறிய ரவீனா டாண்டன்- வைரலாகும் வீடியோ

0
372
- Advertisement -

கேஜிஎஃப் பட நடிகை ரவீனா மீது தாக்குதல் நடத்தி இருக்கும் வீடியோ தான் தற்போதைய இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்தது. இதனை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருருந்தார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும், இந்தப்படத்தில் ராமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தவர் ரவீனா டாண்டன்.
இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ரவீனா டாண்டன் திரைப்பயணம்:

இவர் பத்தர் கே பூல் என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் தன்னுடைய நடிப்பிற்காக தேசிய விருது, பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை எல்லாம் வாங்கி இருக்கிறார்.

ரவீனா டாண்டன் நடித்த படங்கள்:

இவர் தமிழில் அறிமுகமானது அர்ஜுன் நடிப்பில் வெளியான சாது என்ற படத்தின் மூலம் தான். இருந்தாலும், இவர் பிரபலமானது என்னவோ கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படம் மூலம் தான். இந்த படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. பின் இவர் உலகம் முழுவதும் பிரபலமாக வைத்தது யாஷ் நடித்த கே ஜி எஃப் படம். இந்த படத்தின் மூலம் இவர் தென்னிந்திய சினிமாவிலும் பிரபலமானார்.

-விளம்பரம்-

ரவீனா டாண்டன் வீடியோ:

தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரவீனா மீது தாக்குதல் நடத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மும்பையில் நடிகை ரவீனா மற்றும் அவருடைய டிரைவர் இருவருமே குடித்து விட்டு மோசமாக கார் ஓட்டி வந்ததாக அங்கிருந்த பெண்கள் இவரிடம் சண்டை போட்டிருக்கிறார்கள். சண்டை முற்றி ரவீனாவை அங்கிருந்த பெண்கள் தாக்கியிருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை:

அப்போது ரவீனா என்னை அடிக்காதீங்க, என்று சத்தம் போட்டு கத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த வீடியோ மூலம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ரவீனா மற்றும் தாக்குதல் நடத்திய பெண்கள் யாருமே புகார் கொடுக்கவில்லை. விசாரணையில், ரவீனா மற்றும் டிரைவர் குடிபோதையில் மோசமாக கார் ஓட்டியதாக வந்த செய்திகள் எல்லாம் பொய். அவர்கள் யாரையும் இடிக்கவில்லை. கார் ரிவர்ஸ் எடுக்கும்போது சில பெண்கள் அங்கு இருந்தார்கள். அவர்கள் மீது இடிப்பது போல சென்றததால் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement