ஆபத்தான நிலை, ICUவில் சிகிச்சை, மூச்சு விட கூட தனி பைப் – என்ன ஆனது ரவிந்தருக்கு?

0
290
- Advertisement -

தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கனவுருமான ரவீந்தர் சந்திரசேகருக்கு ஐசிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.

-விளம்பரம்-

பின் இவர் நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களாக ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ரவீந்தர் செய்த மோசடி:

அதாவது, சென்னையை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா என்பவர் ரவீந்தர் சந்திரசேகரின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரவீந்தர் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார். பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை.

கைதான ரவீந்தர்:

இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்திருந்தது. பின் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையிலும் அடைத்திருக்கிறார்கள். மேலும், இந்த மோசடி வழக்கில் இவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருந்தார். பல போராட்டங்களுக்கு பின் இவர் ஜாமினில் வெளியே வந்தார். வெளிய வந்தும் இவர் பல பேட்டியில் தன் தரப்பு நியாயத்தை சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

தீவிர சிகிச்சையில் ரவீந்தர்:

இன்னொரு பக்கம் ரவீந்தர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை விமர்சனம் செய்யத் தொடங்கினார். தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இவர் போடும் வீடியோ வைரலாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்.

ரவீந்தர் உடல்நிலை குறித்த தகவல்:

அப்போது இவருக்கு நுரையீரலில் இன்ஃபெக்சன் ஏற்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக ஒரு வாரமாக ரவீந்தர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களும் ரவீந்தர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தும், சீக்கிரமாக குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தும் வருகிறார்கள்.

Advertisement