கைதாகும்போது மகா என்னிடம் கேட்ட கேள்வியால் நான் நொறுங்கிப் போய் விட்டேன் என்று கண்ணீர் மல்க ரவீந்தர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வழக்கு குறித்த சர்ச்சை தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருங்கக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் திடீரென்று ரவீந்தர் சந்திரசேகரன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட செய்தி தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

ரவீந்தர் செய்த மோசடி:

தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா தான் ரவீந்தர் சந்திரசேகரின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரவீந்தர் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார். பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை. இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

ரவீந்தர் ஜாமின் மனு:

இதனை அடுத்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ரவீந்தர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்றும், நான் தயாரித்து சில படங்கள் வெளியாக உள்ளது. அந்த திரைப்படங்கள் வந்த பின் நான் பணத்தை திரும்பி தருகிறேன். கடந்த 14 நாட்களாக சிறையில் இருந்ததால் தனக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றது. இதனால் எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பின் விசாரணையில் இதை மோசடி வழக்கக்காக பதிவு செய்ய முடியாது என்று ரவீந்தர் தரப்பில் விவாதிக்கப்பட்டது.

Advertisement

ரவீந்தர் அளித்த பேட்டி:

ஆனால், புகார் தாரர் தரப்பில் தன்னிடம் மோசடி செய்த பணத்தை இதுவரை மீட்டு தரவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கூறியிருந்தார். மேலும், பிணைத்தொகை கொடுத்து ரவீந்தர் ஜாமினில் விடுதலையாகி இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக ரவீந்தர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய அம்மாவிற்கு பிறகு மகாலட்சுமி தான் எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது எப்படி உட்காருவ, எப்படி எந்திருப்ப என்று மகா கேட்ட போது நான் நொறுங்கி போயிட்டேன்.

Advertisement

மகா குறித்து சொன்னது:

என்னுடைய உடம்பு மற்றவர்கள் உடம்பு போல ஈடு கொடுக்காது. எவ்வளவோ மகா எடுத்து சொல்லியும் என்னை கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். நான் எந்த மோசடியும் செய்யவில்லை. அவருடைய பல திருட்டுத்தனம் மற்றும் தப்பான தொழில் செய்வது பற்றி நான் தெரிந்து கொண்டு விலகி விட்டேன். அதன் காரணமாகத்தான் அவர் என் மீது தவறான புகார் அளித்து, பழியை போட்டு, இப்படி நயவஞ்சமாக பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் அவரை சும்மா விடமாட்டேன். அவருடைய அனைத்து வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்ற போகிறேன் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

Advertisement