‘இது அவளின் கனவு’ – திருமணத்திற்கு பின் சந்தோஷத்தில் மஹாலட்சுமி. ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்.

0
187
ravindar
- Advertisement -

புதிய தம்பதியான ரவீந்தர் – மகாலட்சுமி வீட்டில் மீண்டும் ஒரு விசேஷம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திருமணம் தான். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.

-விளம்பரம்-
ravindar

படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சச்சின் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார்.

- Advertisement -

மகாலட்சுமி முதல் திருமணம்:

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தன்னுடைய மகனுடன் மகாலட்சுமி தனியாக தான் வாழ்ந்து வருகின்றார். பின் தொடர்ந்து மகாலட்சுமி சீரியல் நடித்து வருகிறார். சன் டிவி, ஜீ தமிழ் என பிரபலமான சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி தொடர்பு இருப்பதாக ஈஸ்வரனின் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்திருந்தார்.

மகாலட்சுமி நடிக்கும் சீரியல்:

இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருந்தது. அப்போது கூட மகாலட்சுமியின் முதல் கணவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து தங்களோடு திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதற்குப்பின் மகாலட்சுமி தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் வில்லியாக மிரட்டிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மகாலட்சுமி இரண்டாவது ஆக தயாரிப்பாளர் ரவீந்திரதை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ரவீந்தர்-மகாலட்சுமி திருமணம்:

கடந்த சில வாரங்களுக்கு முன் தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருக்கும் ஷாக் என்று சொல்லலாம். தொடர்ந்து இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை விட பலரும் விமர்சனம் தான் செய்திருந்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் இவர்கள் இருவரும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்த கையேடு இவர்கள் இருவரும் எண்ணெற்ற யூடுயூப் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

ரவீந்தர்-மகாலட்சுமி வீட்டில் விசேஷம்:

அதே போல இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் வந்தாள் மகாலட்சுமி என்ற ஷோவில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்நிலையில் புதிய தம்பதியான மகாலட்சுமி- ரவிந்தர் வீட்டில் விசேஷம் ஒன்று நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை வேற ஒன்னும் இல்லைங்க, திருமணம் முடிந்த அனைவருக்கும் நடக்கும் சடங்கு தான் இவர்களுக்கும் நடந்திருக்கிறது. தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி தான் ரவீந்தர்-மகாலட்சுமி வீட்டில் நடந்தது. அப்போது எடுத்த புகைப்படத்தை தான் ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டால் பகிர்ந்துள்ள ரவீந்தர் ‘மஞ்ச கயிறு To திருமாங்கல்யம். இது அடையாளம் இல்லை. இதை நான் கட்டும் போது அவள் சொன்னால்.இது அவளுடைய கனவு மற்றும் அவளின் வாழ்க்கை.’ .

Advertisement