No செருப்பு, No மது, No போட்டோ – நிஜத்தில் ஒரு முண்டாசுபட்டி கிராமம். அதுவும் நம்ம தமிழ் நாட்டில்.

0
1128
mundasupatti
- Advertisement -

பொதுவாக திரைப்படங்களில் நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் சாத்தியமே இல்லை என்று நாம் நினைத்தது உண்டு. அந்த வகையில் முண்டாசுபட்டி படத்தில் போட்டோ எடுத்தால் இறந்துவிடுவார்கள் என்று ஊர் மக்கள் அனைவரும் நினைத்து கொண்டு இருப்பதை நிஜ வாழ்க்கையில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். நிஜத்தில் இப்படி ஒரு கிராமம் இருக்குமா என்ற எண்ணமும் நமக்கு எழுந்து இருக்கும். ஆனால், தற்போதும் இப்படி ஒரு கிராமம் இருக்கிறது, அதுவும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடியுமா ? இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் முண்டாசுப்பட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

நிஜத்தில் ஒரு முண்டாசுபட்டி கிராமம் :

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாக வெளியான இந்த திரைப்படம் பின்னர் முழு நீள படமாக எடுக்கபபட்டது. ராம் குமார் இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி வெங்கட், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஒரு கிராமத்தில் பின்பற்றப்படும் பல நம்பிக்கைகளையும், பல வருடங்களுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளையும் குறித்து இருந்தது. அதே போல இந்த ஊரில் போட்டோ எடுத்தால் இறந்துவிடுவார்கள் என்ற மூட நம்பிக்கையை மையமாக வைத்தே இந்த படம் முழுதும் நகரும்.

- Advertisement -

ஆனால், உண்மையில் இப்படி ஒரு கிராமம் தற்போதும் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா ? ஆம், முண்டாசுப்பட்டி படத்தில் இருந்த கிராமத்தை போலவே தற்போது நிஜத்திலும் ஒரு கிராமம் இருக்கிறது. அதை பற்றி தான் பிரபல சேனல் பேட்டி எடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானலில் இருந்து கும்பக்கரை அருவி செல்லும் பாதையில் அமைந்துள்ள மலை அடுக்கம் மலை கிராமம்.

அடுக்கம் மலை கிராமம் :

இந்த கிராமத்தில் இன்றும் மக்கள் காலணி அணியாமல் இருக்கிறார்கள். இந்த கிராமத்திற்குள் யார் சென்றாலும் கிராமத்திற்கு வெளியே காலணிகளை விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். அதேபோல் இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் யாரும் மது அருந்தக் கூடாது. அதே மாதிரி மது அருந்தி யாரும் உள்ளே வரக்கூடாது. மேலும், முன்னூறு வருடங்களுக்கு முன்பு இந்த கிராமத்தின் நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் பின்பற்ற தொடங்கியது.

-விளம்பரம்-

ஊரில் இருக்கும் கட்டுப்பாடுகள் :

அப்போதில் இருந்து இப்போது வரை மக்கள் அந்த நம்பிக்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை காக்கும் சாமியை புகைப்படம் எடுக்க கூடாது. அப்படி போட்டோ எடுத்தால் அவர்கள் இறந்து விடுவார்கள். மலை உச்சியிலிருந்து இந்த கிராமத்தின் சாமியை புகைப்படம் எடுத்தவர்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் சாமிக்கு வைத்திருக்கும் தண்ணீர் குடித்தாலும் உடனே மஞ்சளாக வாந்தி எடுத்து, ரத்தம் எடுத்து இறந்துவிடுவார்களாம். மேலும், வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாதம் கிராமத்து சாமிக்கு பூஜை நடக்கும்.

காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்கம் :

அப்போது ஒருவர் உடம்பிலேயே 12 சாமிகள் வந்து அருள்வாக்கு சொல்வார்கள். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் யாரும் புகைப்படமும், வீடியோ எதுவும் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால் அவர்களுக்கான தண்டனை உடனே கிடைக்கும். ஆனால், சில வருடங்களாகவே சாமி யாருடைய உடம்பிலும் முழுமையாக வந்து இறங்கவில்லை என்று அங்கிருக்கும் ஊர் மக்கள் சொல்கிறார்கள்.

ஊர் மக்களுக்கு தெரியாத காரணம் :

இதனால் ஊர் மக்களும் காரணம் என்னவென்று புரியாமல் தவிக்கிறார்கள். இப்படி பல புதிர்கள் உடனும் சுவாரஸ்யங்கள் உடனும் அடுக்கம் கிராமம் நிறைந்திருக்கிறது. தொழில்நுட்பம் எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் நவீன உலகத்தில் தற்போதும் இப்படி ஒரு கிராமம் இருப்பதை பார்க்கையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்த கிராமத்தைப் பற்றிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement