அன்றே கணித்த சூர்யா நிஜ வாழ்வில் ஒரு ‘ உன்னை நினைத்து சம்பவம்’- காதலியால் கிட்னியை இழந்த காதலன் வெளியிட்ட வீடியோ.

0
171
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யா நடித்த படத்தை போலவே ஒருவரின் வாழ்க்கையில் நடந்துள்ள சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் உன்னை நினைத்து. இந்த படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யா, சினேகா, லைலா, ரமேஷ் கண்ணா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் சூர்யா, லைலாவை உயிருக்குயிராக காதலிப்பார். ஆனால், லைலா ஒரு பணக்காரன் கிடைத்தவுடன் சூர்யாவின் காதலை உதறி விட்டு சென்று விடுவார். இருந்தாலும் சூர்யா தன் காதலியின் குடும்பத்திற்காக சொந்த ஹோட்டல், பணம் என எல்லாத்தையும் இழந்து படிக்க வைப்பார்.

- Advertisement -

நிஜ வாழ்வில் ஒரு உன்னை நினைத்து :

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை போன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது. தன்னுடைய காதலியின் தாய்க்கு கிட்னி அளித்தும் தன்னுடைய காதலை உதறி விட்டு சென்ற காதலியை நினைத்து புலம்பும் காதலின் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. படத்தில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பலர் காதலுக்காக உயிர் தியாகம் உள்பட அனைத்தும் செய்திருக்கிறார்கள்.

உயிருக்கு உயிராய் காதலித்த ஆசிரியர் :

இப்படி ஒரு நிலையில் மெக்ஸிகோவின் Baja California பகுதியைச் சேர்ந்தவர் Uziel Martinez. இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். அப்போது அந்த காதலன் தனது காதலை வெளிக்காட்டும் விதமாக தன்னுடைய உடல் உறுப்பான கிட்னியை காதலியின் தாயாருக்கு தானமாக அளித்து அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறார். இவ்வளவு பெரிய தியாகம் செய்தும் அந்த காதலின் காதலை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டு வேறு நபரை ஒரே மாதத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஏமாற்றிய காதலி :

இதை அந்த காதலர் புலம்பித் தவித்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். காதலர் புலம்பி வீடியோவில் பேசியிருப்பது, எனது காதலியின் தாயாருக்கு கிட்னியை தானமாக கொடுத்தேன். ஆனால், நான் தானம் அளித்த ஒரு மாதத்துக்குள் என்னை ஏமாற்றிவிட்டு என் காதலி வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி அவர் வெளியிட்ட வீடியோவை லட்சக்கணக்கான பேர் பார்த்து ஆறுதலாக கருத்து தெரிவித்து வந்தார்கள்.

வைரலாகும் வீடியோ :

உடனே இதை பார்த்த அந்த காதலர், இத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. இதை பார்த்து தர்மசங்கடமாக இருக்கு. எனது காதலி மீது எனக்கு வெறுப்பு ஏதும் கிடையாது. என்னுடைய ஆதங்கம் தான் சொல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ 14 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. பலரும் அவர்க்கு ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றனர். சிலர் இவர்களுடைய காதல் தோல்விக்கு விமர்சித்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement